தமிழ்நாடு
விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களைக் காவல்துறையினர் எக்காரணம் கொண்டும் துன்புறுத்தவோ, அச்சுறுத்தவோ கூடாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், விசாரணை முறைகளுக்கான உரிய விதிகளை வகுத்து, அதனை அனைத்துக் காவல் நிலையங்களிலும் காவல்துறையினர் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
In brief (English)
The Madras High Court issued guidelines restraining police officers from harassing or torturing individuals summoned to police stations for questioning.