தமிழ்நாடு

டெல்லியில் நாளை அவசரமாக கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி நீர் தொடர்பான விவகாரங்களை ஆலோசிக்க, டெல்லியில் நாளை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.

முதலில் காலை நேரத்தில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெறும். இதில் அணைகளின் நீர்மட்டம், நீர்வரத்து, மாநிலங்களின் நீர்த் தேவை மற்றும் அடுத்தகட்ட நீர் திறப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 55-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகள் பங்கேற்க வாய்ப்புள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன