தமிழ்நாடு
திருச்செந்தூர் கோயிலில் பழைய தரிசன நேரம் தொடரும்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, நடை திறப்பு மற்றும் தரிசன நேரம் தொடர்பான பழைய நடைமுறை தொடரும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் இரவு 8 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


