புதுச்சேரி

முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள்: தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசு செயலாளர்களும் உயர் காவல் அதிகாரிகளும் சட்டமன்றத்தில் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

முதல்வரை வாழ்த்த வந்த குழுவிற்கு தலைமைச் செயலாளர் சரத் சவுகான் தலைமை தாங்கினார். அவருடன் பல துறை செயலாளர்கள் கலந்து கொண்டு, முதல்வருக்கு மலர்க் கொத்து வழங்கி, அவரது நீண்ட ஆயுள், நல்ல உடல்நலம் மற்றும் புதுச்சேரியின் முன்னேற்றத்திற்கான அவரது முயற்சிகள் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என நல்வாழ்த்துகள் தெரிவித்தனர்.

அதேபோல், காவல்துறை டி.ஜி.பி. ஷாலினி சிங் தலைமையில், உயர் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் சட்டமன்றத்திற்கு வந்து முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து வாழ்த்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன