தமிழ்நாடு
அரியலூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் தர்ணா: கைதால் பரபரப்பு
அரியலூர் அருகே குடியிருப்பு மற்றும் பள்ளி மாணவர்கள் நடமாடும் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி பெண்கள் வலியுறுத்தி வந்தனர். அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், அவர்களை போலீசார் பலவந்தமாக கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
In brief (English)
Women staged a dharna demanding the relocation of a TASMAC liquor shop near Ariyalur. Tension prevailed after police forcibly detained and arrested the protesting women.