புதுச்சேரி

ஜனாதிபதியின் வண்ண விருது விழாவில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்

புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கும் விழா, கோரிமேடு காவல்துறை மைதானத்தில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற இந்த விழாவில் காவல்துறையினர் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

அணிவகுப்பில் நீண்ட நேரம் நின்றிருந்த சில காவலர்கள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த மருத்துவக் குழுவினர் காவலர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

காவலர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். விழா தொடர்ந்து நடைபெறும் வகையில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன