புதுச்சேரி

புதுச்சேரி அரசு செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்: சுகாதாரத்துறை அறிவிப்பு

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் நர்சிங் ஆபிசர், சீனியர் நர்சிங் ஆபிசர் மற்றும் உதவி/துணை நர்சிங் சூப்ரண்ட் பணியிடங்களுக்கு புதிய சீருடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண் செவிலியர்களுக்கு ஒட்டக நிறத்திலான சல்வார் சூட் மற்றும் வெள்ளை நிற ஓவர்கோட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண் செவிலியர்களுக்கு ஒட்டக நிறச் சட்டை, காபி நிற பேண்ட் மற்றும் முழுக்கை வெள்ளை ஓவர்கோட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியின் போது வெள்ளை நிற சாக்ஸ் மற்றும் ஷூ அணிவது கட்டாயமாக்கப்பட்டு ஆளுநர் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

In brief (English)

Puducherry Health Department released an official order introducing a new dress code for government nursing officers and superintendents.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *