புதுச்சேரி

மாநில அந்தஸ்து கிடைத்தாலே கடன் தள்ளுபடி சாத்தியம்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைத்தாலே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், மாநில அந்தஸ்து பெறுவதே இந்த அரசின் முதன்மை நோக்கம் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் என்.ரங்கசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் பேசுகையில், புதுச்சேரி அரசுக்கு இருக்கும் கடன் சுமையை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து டெல்லி சென்று மத்திய அரசை நேரில் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் கடன் தள்ளுபடி என்பது சாத்தியமாகும் என்றும், யூனியன் பிரதேசமாக இருக்கும் வரை இதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெறுவதே தற்போதைய அரசின் தீவிர எண்ணம் மற்றும் இலக்காக உள்ளது எனவும் அவர் பேரவையில் தெளிவுபடுத்தினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன