புதுச்சேரி

முத்தியால்பேட்டையில் நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகள் அகற்றும் பணி தொடக்கம்!

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பாதாள சாக்கடை அடைப்புகளை அதிநவீன இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணிகள் துரிதமாகத் தொடங்கப்பட்டுள்ளன.

முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள பல்வேறு குடியிருப்பு வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனை சீர்செய்யும் வகையில், நவீன கழிவுநீர் உறிஞ்சும் மற்றும் தூர்வாரும் உயர் அழுத்த ஜெட்டிங் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோர் முன்னிலையில் இப்பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன. நவீன இயந்திரங்கள் மூலம் குழாய்களில் தேங்கியுள்ள மணல், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் திடக் கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அப்பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன