புதுச்சேரி

மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி மனு

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறையில் ஓய்வுபெற்ற நீதிபதி விமலா தலைமையில் மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற புதுச்சேரி சென்டாக் மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச்சங்கத்தினர் மனு ஒன்றளித்தனர். அதில் தனியார் கல்லூரிகள் எம்பிபிஎஸ் மற்றும் பிஜி மருத்துவப் படிப்புகளுக்கு பல லட்சங்கள் கூடுதலாக வசூலிப்பதாகக் குற்றம் சாட்டினர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கும் அரசாணையை அரசு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

In brief (English)

Puducherry Student-Parent Association submitted a petition demanding action against private medical colleges collecting excess fees beyond fixed rates.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *