புதுச்சேரி
இலாகா ஒதுக்கீடு: துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆலோசித்தார் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி இன்று துணைநிலை ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பாக இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களின் பொறுப்புகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இலாகா ஒதுக்கீட்டுக்கான இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
தற்போது அமைச்சர்கள் யாருக்கும் இலாகா அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்படவில்லை. இதனால் அமைச்சர்கள் தங்கள் துறைப் பொறுப்புகளை ஏற்காத நிலை நீடித்து வருகிறது.
இலாகா ஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு வரும் திங்கட்கிழமை துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

