புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முதல் சுற்றில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அபார முன்னிலை!

புதுச்சேரி, அக். 09:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் முதல் சுற்றிலேயே கணிசமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் காலை முதல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. இதில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 3,209 வாக்குகள் பெற்று முதலிடத்தில் பலமான முன்னிலையைத் தக்க வைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விநாயகம் 1,222 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். திமுக வேட்பாளர் சேது செல்வம் 786 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

முதல் சுற்றிலேயே என்.ஆர். காங்கிரஸ் கட்சி கணிசமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து, அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன