காரைக்கால்

காரைக்கால் நிரவி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்: எம்எல்ஏ டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் வழங்கினார்!

காரைக்கால்: புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பள்ளிப் பயணத்தை எளிதாக்கும் வகையிலும், கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, காரைக்கால் மாவட்டம் நிரவி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நிரவி – திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு புதுச்சேரி அரசின் சார்பில் இலவச மிதிவண்டிகளை முறைப்படி வழங்கி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தொலைதூரப் பகுதிகளில் இருந்து பள்ளிக்கு சிரமமின்றி குறித்த நேரத்தில் வந்து சேர இந்த மிதிவண்டிகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், அரசு வழங்கும் அனைத்து கல்வி நலத்திட்டங்களையும் முழுமையாகப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்துகொண்டனர். அரசின் இந்த இலவச மிதிவண்டி திட்டத்தினால் மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன