பேரளத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சாதனையாளர் விருது: காரைக்கால் எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் வழங்கினார்!

பேரளத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் கல்விச் சேவையைப் பாராட்டி சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சிறப்பாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு–கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் மருத்துவருமான டாக்டர் வி. விக்னேஸ்வரன் (MBBS) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தொடர்ந்து, சிறந்த முறையில் கல்விப் பணியாற்றி மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களுக்கு அவர் சாதனையாளர் விருதுகளை வழங்கி பாராட்டி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டிய சட்டமன்ற உறுப்பினர், எதிர்கால தலைமுறையை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது என்று குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)




