புதுச்சேரி

பிரதமர் மோடியின் பிறந்தநாள்: வீடுகளில் ஆசீர்வாத தீபம் ஏற்ற அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வேண்டுகோள்!

புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் ஆசீர்வாத தீபம் ஏற்றி பிரார்த்திக்க வேண்டும் என்று அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பல்வேறு சேவை மற்றும் மக்கள் நல்வாழ்வுப் பணிகள் ‘சேவா சங்கல்ப் அபியான்’ இயக்கத்தின் கீழ் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியிலும் பாஜக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுநலப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் பிரதமர் மோடியின் நீண்ட ஆயுள், நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்திற்காக பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் பக்தி சிரத்தையுடன் ஆசீர்வாத தீபம் ஏற்றி வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன