புதுச்சேரி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்த வெளிமாநில பத்திரிகையாளர்கள் குழு!

புதுச்சேரி: மத்திய அரசின் ‘விக்சித் பாரத்’ திட்டத்தின்கீழ், பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) சார்பில் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள உத்திரபிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் குழுவினர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதனை ஆளுநர் மாளிகையான மக்கள் இல்லத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த முக்கிய சந்திப்பின் போது, மத்திய அரசின் கள விளம்பரப் பிரிவின் உதவி இயக்குனர் (பொறுப்பு) சக்திவேல் உடனிருந்தார். இக்கலந்துரையாடலில், புதுச்சேரி அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆளுநருடன் பத்திரிகையாளர்கள் விரிவாகக் கேட்டறிந்தனர்.

மேலும், புதுச்சேரியின் தனித்துவமான கலை, பண்பாடு, கலாச்சார சிறப்புகள், கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் வளர்ச்சி, சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்துறை முன்னேற்றம் மற்றும் இளைஞர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிமாநில பத்திரிகையாளர்களின் இந்த நேரடி களப்பயணம் புதுவையின் வளர்ச்சித் திட்டங்களை வெளிக்கொணர உதவும் வகையில் அமைந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன