புதுச்சேரி

உழவர்கரை தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை எம்.எல்.ஏ. டாக்டர் கே. நாராயணசாமி நேரில் ஆய்வு!

புதுச்சேரி: உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதி பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, பிக்கர்பெட் – பாட்கோ (PADCO) குடியிருப்பு பகுதியில் அரசு சார்பில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டு வரும் புதிய ஆழ்குழாய் கிணறு (Borewell) மற்றும் பம்ப் ஹவுஸ் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மூலக்குளம் செபஸ்தியார் கோயில் வீதியில் புதிய மின்கம்பங்கள் நடும் பணிகளையும், ஜே.ஜே. நகர் 7-வது தெரு முதல் 12-வது தெரு வரை மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது அரசுத்துறை அதிகாரிகள், என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன