தமிழ்நாடு
குமாரபாளையம் அருகே பயங்கர விபத்து: கல்லூரி பேருந்து மோதி 4 மாணவிகள் பரிதாப பலி!
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே கல்லூரி பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 4 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் பகுதியில் மாணவிகள் நால்வரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கல்லூரி பேருந்துடன் பலமாக மோதியது.
இந்த விபத்தின் தாக்கத்தில் தூக்கி வீசப்பட்ட 4 மாணவிகளும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த எலச்சிபாளையம் போலீசார், உயிரிழந்த மாணவிகளின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

