புதுச்சேரி

அரசு விழாவில் என்னை கீழே அமர வைத்தது மீனவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்: எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் ஆதங்கம்!

புதுச்சேரி: மத்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில், மற்ற எம்.எல்.ஏ.க்கள் மேடையில் அமர்ந்திருந்த சூழலில், தன்னை மட்டும் பார்வையாளர் பகுதியில் கீழே அமர வைத்தது மீனவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “அரசு விழாவில் நடந்த இந்தச் சம்பவத்தை என் தனிப்பட்ட அவமானமாக நான் பார்க்கவில்லை. என்னை மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையைப் பாதிக்கும் செயலாகவே இதைக் கருதுகிறேன். இதனால் ஏற்பட்ட மனவேதனையால்தான் அமைதியான முறையில் அந்த விழாவில் இருந்து உடனடியாக வெளியேறினேன்” என்று தெரிவித்தார்.

மேலும், வைத்திக்குப்பம் மற்றும் குரைசுக்குப்பம் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைக்கப்பட வேண்டும் என்பது மீனவ மக்களின் மிக முக்கியமான மற்றும் நீண்ட நாள் கோரிக்கையாகும். இக்கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் நேரடியாக வலியுறுத்துவதற்காக விரைவில் புதுடெல்லி சென்று அவரைச் சந்திக்க உள்ளதாகவும், தூண்டில் வளைவுத் திட்டத்தை நிறைவேற்றும் வரை இறுதிவரை உறுதியாகப் போராடுவேன் என்றும் எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன