சினிமா

பாரம்பரிய நகைகளில் பேரழகாய் ஜொலிக்கும் நடிகை கேத்ரின் தெரசா: வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தமிழ் சினிமாவில் ‘மெட்ராஸ்’, ‘கதகளி’, ‘கணிதன்’ உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர் நடிகை கேத்ரின் தெரசா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் கேத்ரின் தெரசா, அவ்வப்போது தனது வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில், பாரம்பரிய மற்றும் நவீன ஆபரணங்கள் அணிந்து அவர் தற்போது வெளியிட்டுள்ள பிரத்யேக புகைப்படத் தொகுப்பு இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

ஸ்ரீ கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் விளம்பரப் போட்டோஷூட்டின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்ட இந்த புகைப்படங்களில், கேத்ரின் தெரசாவின் கம்பீரமான தோற்றமும், வசீகரப் புன்னகையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இப்புகைப்பட வரிசை லட்சக்கணக்கான லைக்குகளையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன