தமிழ்நாடு

மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி; அதிமுக நிர்வாகிகள் மரியாதை!

சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவரது ஒப்பற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய விடுதலைக்காகத் தெற்கிலிருந்து வீறுகொண்டு எழுந்த நெற்கட்டான் செவலின் மாவீரர், இளம் வயதிலேயே துணிச்சலோடு ‘வெள்ளையனே வெளியேறு’ என வீர முழக்கமிட்டவர். போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத தீரராகத் திகழ்ந்து, வீரத்தில் மட்டுமல்லாமல் இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இதனையொட்டி, தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் திருவுருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன