புதுவை சிவம் நினைவு நாள்: அமைச்சர் ராஜவேலு, எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உருவச்சிலைக்கு மரியாதை!
புதுச்சேரி: புதுவையின் சுதந்திரப் போராட்ட வீரரும் முக்கியத் தலைவருமான புதுவை சிவம் அவர்களின் நினைவு நாள் புதுச்சேரியில் அரசு சார்பாக உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
அரசு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜவேலு கலந்துகொண்டு, புதுவை சிவம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், லோக் ஜனசக்தி கட்சியின் (LJK) தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜே.சி.எம். (ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்) இந்நிகழ்வில் பங்கேற்று புதுவை சிவம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
