ரூ.290.08 கோடி மதிப்பிலான 250 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்: முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடக்கம்!

சென்னை, ஆக. 25: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் ரூ.290 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள 250 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று முறைப்படி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் அர்ப்பணித்தார்.
பொதுமக்களின் தினசரி பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்யும் நோக்கிலும் இந்தப் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கொடியசைத்துத் தொடக்கி வைத்த பின்னர், புதிய பேருந்துகளில் செய்யப்பட்டுள்ள நவீன பாதுகாப்பு அம்சங்கள், இருக்கை அமைப்புகள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநிலம் முழுவதும் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த 250 புதிய பேருந்துகளும் பல்வேறு வழித்தடங்களில் உடனடியாக இயக்கப்பட உள்ளன. இப்புதிய பேருந்துகளின் வரவு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



