புதுச்சேரி

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏஐ (AI) மூலம் கற்றல் வகுப்பு: கதிர்காமம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

புதுச்சேரி, மேட்டுப்பாளையம் விடுதலை வீரர் இரா. சீனிவாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திலான வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய முயற்சியை கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அழகானந்தம் தொடங்கி வைத்தார்.

மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தில் பாடங்களை எளிமையாகக் கற்பிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் இத்தகைய டிஜிட்டல் கற்றல் வசதிகள் கொண்டுவரப்பட்டிருப்பது மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன