தமிழ்நாடு

தீரர் சத்தியமூர்த்தி 140-வது பிறந்த நாள்: கே.வீ. தங்கபாலு மரியாதை

சென்னை, ஆக. 19: தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் 140-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அமைந்துள்ள அவரது திருவுருவப் படம் மற்றும் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் திரளாக பங்கேற்றனர்.

நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்கள் அருள் பெத்தையா, தணிகாசலம் மற்றும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், TCTU தலைவர் டாக்டர் புவனேஸ்வரி நஞ்சப்பன் உள்ளிட்ட நிர்வாகிகளும், சர்க்கிள் மற்றும் வட்டத் தலைவர்களும் கலந்து கொண்டு தீரர் சத்தியமூர்த்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன