தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் கணிப்பு

சென்னை, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி, ஆவடி உள்ளிட்ட இடங்களிலும் சேலம், ஈரோடு, விருதுநகர் மாவட்டங்களிலும் பரவலாகக் கனமழை பெய்து வெப்பம் தணிந்தது.இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வட உள் தமிழக மாவட்டங்களில் இன்று முதல் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

In brief (English)

Rainfall brought relief from heat in Chennai and several interior districts, with the Regional Meteorological Centre predicting moderate rain across Tamil Nadu over the coming week.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன