தமிழ்நாடு
ப்ளூபெரி, டிராகன் பழம் உள்ளிட்ட உயர் மதிப்பு பழ சாகுபடிக்கு ₹1.87 கோடி ஒதுக்கீடு
பொதுமக்களிடையே அண்மைக்காலமாக ப்ளூபெரி, ரம்பூட்டான், லிச்சி, டிராகன் பழம், அவகோடா, கிவி, மங்குஸ்தான் போன்ற பல வகையான உயர் மதிப்பு பழங்களின் நுகர்வு அதிகரித்து வருகிறது. இதனை நமது மாநில விவசாயிகளிடையே தனிப்பயிராகவும் ஊடு பயிராகவும் ஊக்குவிக்க 930 ஏக்கரில் சாகுபடி செய்ய ₹1.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்லாந்து இனிப்பு புளி மற்றும் சமவெளி பகுதியில் விளையும் ஆப்பிள் ரகங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இது விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக உயர்த்த உதவும்.
In brief (English)
Tamil Nadu will support exotic fruit farming, including blueberry, dragon fruit, and avocado, across 930 acres with an allocation of ₹1.87 crore.