தமிழ்நாடு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: பவானி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் பில்லூர் அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 8000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குற்றாலம் அருவிகளிலும் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
In brief (English)
Continuous rains in the Western Ghats have significantly raised water levels in key dams across Tamil Nadu, prompting a flood warning along the Bhavani river. Water release from Pillur dam has been increased to ensure safety.
