தேசியம்

கேரளா கனமழை: சபரிமலை பயணத்தை ஒத்திவைக்க தேவஸ்தானம் வேண்டுகோள்

கேரளா மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் நீர்மட்டம் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இடுக்கி, பத்தனம்திட்டா போன்ற மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அம்மாநில அரசு பல இடங்களில் நிவாரண முகாம்களை அமைத்துள்ளது.

In brief (English)

Heavy rainfall in Kerala has caused severe flooding in the Pamba river, leading authorities to ask Sabarimala pilgrims to postpone their visits. Rescue operations are currently underway in several affected districts.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *