புதுச்சேரியில் முதன்முறையாக விஜய் ஆன்டனி லைவ் கச்சேரி
புதுச்சேரி முதன்முறையாகத் தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர், பாடகர், நடிகர் விஜய் ஆன்டனியின் மேடை இசையை நேரில் காணப் போகிறது. Noise and Grains அமைப்பு வழங்கும் இந்தச் சிறப்பு லைவ் கச்சேரி, புதுச்சேரி இசைப் பிரியர்களுக்கு மறக்க முடியாத இரவாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் பாடல்கள், பின்னணி இசைகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விஜய் ஆன்டனி, இந்நிகழ்ச்சியில் நேரடியாக ரசிகர்களுக்கு முன் பாடல்களைப் பாடவுள்ளார்.
விஜய் ஆன்டனியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இசையை நேசிக்கும் அனைவருக்குமான இந்தக் கச்சேரி, புதுச்சேரி நகரின் கலாச்சார, பொழுதுபோக்கு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியின் தேதி, இடம் மற்றும் டிக்கெட் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை; அவை விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.