புதுச்சேரி

அரவிந்தர் பிறந்தநாள்: மாத்ரிமந்திரில் அமைதி, ஆன்மிக நினைவேந்தல்

இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி, ஸ்ரீ அரவிந்தரின் 154-வது பிறந்தநாளையொட்டி ஆரோவில் மாத்ரிமந்திர் அம்பிதியேட்டரில் சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாத்ரிமந்திருக்கு முன்பாக அமைந்துள்ள படிக்கட்டு அரங்கத்தில், மாலை நேரத்தில் புனித அக்னி மூட்டப்பட்டு, மலர்கள் மற்றும் தீபங்களால் அலங்கரிக்கப்பட்ட வடிவமைப்புகள் முன்பாக நூற்றுக்கணக்கானோர் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டனர்.

ஆரோவில் வாசிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, ஸ்ரீ அரவிந்தரின் தத்துவங்களையும் அவரது பணிகளையும் நினைவுகூர்ந்தனர். அமைதி, விழிப்புணர்வு மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஆரோவில் மீடியா இன்டர்ஃபேஸ் தெரிவித்துள்ளது.

இதே நாளில் ஆரோவில் கலாச்சார மையத்தில் நடைபெற்ற சிறப்பு ஓவியக் கண்காட்சியும் பொதுமக்களின் பார்வையை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன