சினிமா

மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். முன்னதாக, ஜாய் கிரிசில்டா அளித்த புகாரைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட டிஎன்ஏ அறிக்கையில் ரங்கராஜ் தான் தந்தை என உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ராகா ரங்கராஜ் என்ற அக்குழந்தையின் நலன் மற்றும் எதிர்காலத்திற்கு வாழ்நாள் முழுவதும் முழுப் பொறுப்பேற்பதாக அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆறு மாதங்களாக ஒரு தந்தையாகத் தனது கடமைகளைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன