புதுச்சேரி

தற்காலிக சபாநாயகர் அன்பழகனைச் சந்தித்து ‘Rising Puducherry’ புத்தகத்தை வழங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், பேரவையின் தற்காலிக சபாநாயகர் திரு. அன்பழகன் அவர்களை, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘Rising Puducherry’ என்ற தனது தொலைநோக்குப் பார்வை கொண்ட புத்தகத்தை சபாநாயகர் அன்பழகனிடம் அவர் வழங்கினார்.

புதுச்சேரியின் பொருளாதாரம், இளைஞர்களுக்கான கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மாநில வளர்ச்சி குறித்த கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன