சினிமா

‘பிக் பாஸ் அக்னிபரீட்சை 2’ தொகுப்பாளினி ஸ்ரீமுகி வண்ணமயப் புகைப்படங்கள்

தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான ஸ்ரீமுகி, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் மா சேனலில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் அக்னிபரீட்சை 2’ நிகழ்ச்சியை முன்னிட்டு எடுத்துக்கொண்ட வண்ணமயப் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மஞ்சள் நிற பின்னணியில், பச்சை நிற சட்டையுடனும் நீல நிற பாவாடையுடனும் கூடிய நவநாகரிக உடையில் அவர் காட்சியளிக்கிறார். ஆடை வண்ணத்திற்கு ஏற்ற நகைகளுடன் கூடிய இந்த புகைப்படத் தொகுப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொலைக்காட்சித் தொகுப்பாளினியாக ‘அதர்ஸ்’, ‘சூப்பர் சிங்கர் 9’, ‘பட்டாஸ்’, ‘பலே சான்ஸ் லே’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள ஸ்ரீமுகி, தெலுங்கு பிக் பாஸ் மூன்றாம் சீசனில் இரண்டாவது இடத்தை பெற்றவர். ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமான இவர், தற்போது ‘பிக் பாஸ் அக்னிபரீட்சை 2’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன