குப்பை சேகரிக்க வந்த 12 மின்சார ஆட்டோக்கள் முடக்கம்: கம்பன் கலையரங்கில் பாழாகும் அவலம்
புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட 12 மின்சார ஆட்டோக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் கம்பன் கலையரங்க வளாகத்தில் பல மாதங்களாக முடங்கி கிடக்கின்றன. புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் புகார்களுக்கு 3 முதல் 6 மணி நேரத்திற்குள் தீர்வு காண வாட்ஸ்அப் எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பயன்பாட்டுக்கு வராத மின்சார ஆட்டோக்கள் வெயில் மற்றும் மழையில் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகனங்களுக்கு முறைப்படி பதிவு எண் கிடைத்தவுடன் உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
In brief (English)
Twelve electric autos procured for door-to-door garbage collection in Puducherry remain unused at Kamban Kalaiarangam awaiting vehicle registration.

