தேசியம்தொழில்நுட்பம்

டீப்ஃபேக் உள்ளடக்கங்களுக்கு கடும் கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடிக்கை

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் டீப்ஃபேக் வீடியோ, ஆடியோ, புகைப்படம் உள்ளிட்ட போலி உள்ளடக்கங்களின் பாதிப்பைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை வலுப்படுத்தியுள்ளது. இனி AI மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களில் அது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசு அல்லது நீதிமன்றத்தின் செல்லுபடியாகும் உத்தரவு கிடைத்ததும், சட்டவிரோத உள்ளடக்கங்களை சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்கள் 36 மணி நேரத்தில் அல்லாமல் 3 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும். நிர்வாணம், ஆள்மாறாட்டம் போன்ற மிக முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான புகார்களில், நடவடிக்கை எடுக்கும் காலக்கெடு 24 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளில் முக்கிய அம்சங்கள்

  • அனுமதிக்கப்படும் AI உள்ளடக்கங்களுக்கு தெளிவான லேபிள் மற்றும் அதன் மூலத்தை கண்டறியக்கூடிய மெட்டாடேட்டா இருக்க வேண்டும்.
  • தளங்கள் பயனாளர்களுக்கு சட்டவிரோத AI உள்ளடக்கத்தைப் பகிர்வதால் ஏற்படும் சட்ட விளைவுகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • சமூக வலைதள நிறுவனங்கள் புகார்களுக்கு தீர்வு காணும் காலக்கெடுவை 72 மணி நேரத்தில் இருந்து 36 மணி நேரமாகக் குறைக்க வேண்டும்.
  • சட்டவிரோத டீப்ஃபேக், ஆள்மாறாட்டம், தவறான தகவல் பரப்புதல் போன்ற செயல்களுக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன