தமிழ்நாடு
தொகுதி மறுவரையறை குறித்து எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை
தொகுதி மறுவரையறை மசோதாவால் தமிழகத்துக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக, முதலமைச்சர் விஜய் இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் எம்.பி.க்களிடம், தொகுதி மறுவரையறை தொடர்பான அவர்களது கருத்துகள் மற்றும் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறித்த கவலைகள் கேட்கப்பட உள்ளன.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்படும்போது தமிழகத்திற்கு நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுமா என்ற விவாதம் நீடித்து வரும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது
