அகில இந்திய மாஸ்டர் வலுதூக்கும் போட்டி: 3 பதக்கம் வென்ற ஜெயமூர்த்திக்கு வாழ்த்து
மகாராஷ்டிராவில் நடைபெற்ற அகில இந்திய மாஸ்டர் வலுதூக்கும் போட்டியில் புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த பொதுப்பணித் துறை ஊழியர் ஜெயமூர்த்தி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
3 பதக்கங்கள் வென்று சாதனை
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் கடந்த 21.07.2026 அன்று அகில இந்திய மாஸ்டர் வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் முதலியார்பேட்டை தொகுதி தியாகு முதலியார் நகரைச் சேர்ந்த பொதுப்பணித் துறை ஊழியர் ஜெயமூர்த்தி கலந்து கொண்டார்.
சிறப்பான திறனை வெளிப்படுத்திய அவர், இப்போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றார்.
சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு
போட்டியில் வெற்றி பெற்ற ஜெயமூர்த்தி, முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மாநில துணைத் தலைவருமான ஏ. பாஸ்கரை நேரில் சந்தித்துப் வாழ்த்து பெற்றார்.
ஜெயமூர்த்தியின் கடின உழைப்பு மற்றும் விளையாட்டு ஒழுக்கத்தைப் பாராட்டிய பாஸ்கர், எதிர்காலத்தில் அவர் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

