சென்னை: சாதனை படைத்த பெண்களுக்கு ‘WoW’ விருதுகள் வழங்கி கௌரவித்த தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை, ஆக. 21: சென்னையில் நடைபெற்ற ‘WoW – Women of Wonder Awards 2026’ விழாவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கி தமிழச்சி தங்கபாண்டியன் கௌரவித்தார். எழும்பூரில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பங்களிப்பை பாராட்டி அவர் உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், “பெண்களின் திறமை, கடின உழைப்பு மற்றும் அவர்கள் கடந்து வந்த தடைகளை அங்கீகரிக்கும் இத்தகைய விருது விழாக்கள், வளர்ந்து வரும் இளம் பெண்களுக்கு பெரும் உந்துசக்தியாக அமையும். கனவுகளை நோக்கிப் பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தகைய அங்கீகாரம் மிக அவசியம்,” எனத் தெரிவித்தார்.
இந்த விருது விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த மை ஸ்கிரீன் மீடியா (My Screen Media) இயக்குநர் சினேகா சக்திவேல் மற்றும் விஷனரி பரிவு டாக்டர் எஸ். சக்திவேல் ஆகியோரை அவர் பாராட்டினார். விருது பெற்ற பெண்கள் தங்கள் துறைகளில் மேலும் பல மைல்கற்களை எட்ட வேண்டும் என அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

