எங்களைப் பற்றி | About Us
PondyNews என்பது புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டுச் செய்திகளைத் தமிழில்
வழங்கும் ஒரு சிறிய, சுயேச்சையான செய்தித் தளம்.
நாங்கள் தொடங்கிய காரணம்
புதுச்சேரியில் நடக்கும் செய்திகள் — நகராட்சிப் பணிகள், பள்ளி அறிவிப்புகள்,
கோயில் திருவிழாக்கள், போக்குவரத்து மாற்றங்கள், வேலைவாய்ப்பு அறிவிப்புகள் — பெரும்பாலும்
பெரிய செய்தி நிறுவனங்களின் கவனத்தில் விழுவதில்லை. உள்ளூர் தொலைக்காட்சிச்
செய்திகளில் மட்டுமே வந்து மறைந்துவிடும். அவற்றைப் படிக்கும் வடிவில், தேடிக்
கண்டுபிடிக்கக்கூடிய வடிவில் ஒரே இடத்தில் கொண்டுவருவதே எங்கள் நோக்கம்.
நாங்கள் தரும் பிரிவுகள்
- புதுச்சேரி — புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளூர்ச் செய்திகள்
- தமிழ்நாடு — மாநில அளவிலான செய்திகள்
- தேசியம் — இந்திய மற்றும் உலகச் செய்திகள்
- தொழில்நுட்பம் — தொழில்நுட்பச் செய்திகள்
- வேலைவாய்ப்பு — அரசு மற்றும் தனியார் வேலை அறிவிப்புகள்
எங்கள் செய்திகள் எங்கிருந்து வருகின்றன
நாங்கள் சொந்தமாக நிருபர்களை வைத்திருக்கவில்லை. எங்கள் செய்திகள்:
- உள்ளூர் தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகள் (AMN TV, Rainbow TV, Supreme TV உள்ளிட்டவை)
- மாநில அளவு செய்தி நிறுவனங்களின் செய்தி நிகழ்ச்சிகள்
- இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உள்ளிட்ட அதிகாரப்பூர்வ
அறிவிப்புகள்
ஆகியவற்றில் வெளியான தகவல்களைத் தொகுத்து, எங்கள் சொந்த வார்த்தைகளில்
சுருக்கமாக எழுதப்படுகின்றன. மற்ற செய்தி நிறுவனங்களின் கட்டுரைகளைச்
சுருக்கும்போது, அந்த நிறுவனத்தின் பெயரையும் மூலச் செய்திக்கான இணைப்பையும்
கட்டாயம் கொடுக்கிறோம்.
இந்தத் தொகுப்பு மற்றும் சுருக்கும் பணியில் தானியங்கி
தொழில்நுட்பத்தை (automation) பயன்படுத்துகிறோம். இதனால் ஒரு நாளில் வெளியாகும்
அதிகமான செய்திகளை விரைவாகத் தமிழில் தர முடிகிறது. இதை வெளிப்படையாகச்
சொல்வதே சரியென நினைக்கிறோம்.
நாங்கள் செய்யாதவை
- உறுதிப்படுத்தப்படாத வதந்திகளை வெளியிடுவதில்லை
- கிளிக் பெறுவதற்காக மிகைப்படுத்திய தலைப்புகள் தருவதில்லை
- மற்ற நிறுவனங்களின் கட்டுரைகளை அப்படியே காப்பி செய்வதில்லை
- உங்கள் தனிப்பட்ட தகவலை விற்பனை செய்வதில்லை
தவறுகள் இருந்தால்
நாங்கள் தவறு செய்யலாம். ஒரு செய்தியில் தவறான தகவல் இருப்பதைக் கண்டால்
தயவுசெய்து எங்களுக்குத் தெரிவியுங்கள் — சரிபார்த்து உடனடியாகத் திருத்துவோம்
அல்லது நீக்குவோம். contact@pondynews.in
About PondyNews (English)
PondyNews is a small, independent Tamil-language news site covering Puducherry
and Tamil Nadu.
Why we started
A lot of what happens in Puducherry — municipal works, school notices, temple
festivals, traffic changes, job notifications — rarely reaches the large news
organisations. It appears once on local television and then disappears. Our aim is
to bring it together in one place, in a readable and searchable form.
What we cover
Puducherry (including Karaikal, Mahe and Yanam), Tamil Nadu, national and world
news, technology, and job notifications.
Where our news comes from
We do not have our own reporters. Our reports are compiled from local and
statewide television news bulletins, and from official announcements such as those
issued by the Press Information Bureau (PIB) of the Government of India. We write
the facts in our own words. When we summarise another news
organisation’s reporting, we credit them by name and link to the original.
We use automation to help compile and summarise this material,
which is how a small site can cover a full day’s news in Tamil. We think it is
right to say so openly.
What we don’t do
We don’t publish unverified rumours, write exaggerated headlines for clicks,
copy other organisations’ articles, or sell your personal information.
Corrections
We can get things wrong. If you spot an error, please tell us at
contact@pondynews.in — we will check it and correct or remove
the report promptly.